வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: புதன், 25 ஜூன் 2014 (18:44 IST)

ஜுலை 9 முதல் சுந்தர். சி, விஷால் படம் ஆரம்பம்

சுந்தர். சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா நடிக்கும் புதிய படம் ஜுலை 9 -ம் தேதி ஆரம்பமாகிறது.
சுந்தர். சி இயக்கியிருக்கும் அரண்மனை ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஜுலை இரண்டாவது வாரத்தில் அல்லது இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அரண்மனை வெளியாவதற்கு காத்திருக்காமல் ஜுலை 9 -ம் தேதியே தனது புதிய படத்தை சுந்தர். சி ஆரம்பிக்கிறார். விஷால், ஹன்சிகா இதில் நடிக்கின்றனர்.
 
சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த மத கஜ ராஜா இன்னும் வெளியாகாமலே உள்ளது. தயாரிப்பாளரின் கடன் காரணமாக படத்தை வெளியிட முடியாத நிலை. இப்படியொரு சூழல் ஏற்பட்டது இருவருக்குமே வருத்தம்தான். அதன் காரணமாகவே மீண்டும் இருவரும் ஒன்றிணைகிறார்கள். 
 
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படம் மத கஜ ராஜா போன்று தயாரிப்பாளரின் பைனான்ஸ் பிரச்சனையால் நிற்பதற்கு வாய்ப்பில்லை. காரணம் படத்தை விஷாலே தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். 
 
2015 பொங்கல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.