Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டுக்கு விஷால் பதில்

Last Modified புதன், 10 ஜனவரி 2018 (23:20 IST)
மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும், மலேசியா சென்ற மூத்த கலைஞர்களுக்கு சரியான மரியாதை கொடுக்காமல் அவமதிக்கப்பட்டதாகவும், நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் சங்க நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டினார்

இந்த குற்றச்சாட்டுக்கு இன்று செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் விளக்கம் அளித்தார். அவர் இதுகுறித்து கூறியபோது, ''எஸ்.வி. சேகர் டிரஸ்டி பதவியில் இருந்து விலகுவதற்கு ஒரு காரணத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. நட்சத்திர கலை விழாவில் மூத்த கலைஞர்கள் அனைவரையும் அழைத்து உரிய மரியாதை கொடுக்கப்பட்டது' என்று கூறினார்.

மேலும் நடிகர் சங்க கட்டிடம் கட்ட அஜித் கூறிய கருத்து குறித்து எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கு பதில் கூற விஷால் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மேலும் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவில் திரட்டப்பட்ட நிதி குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்' என்றும் அவர் தெரிவித்தார்இதில் மேலும் படிக்கவும் :