திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 3 ஜூலை 2017 (18:28 IST)

DTH-ல் புதிய படங்கள் வெளியீடு? விஷால் மறுப்பு

புதிதாக வெளியாகும் திரைப்படங்களை நேரடியாக DTH-ல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பரவிய செய்திக்கு நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
ஐஎஸ்டி அமலுக்கு வந்ததால் திரையரங்குகள் 30% கேளிக்கை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திரையரங்கு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியதாவது:-
 
புதிதாக வெளியாகும் திரைப்படங்களை நேரடியாக DTH மூலம் வெளியிட எந்த முடிவும் எடுக்கவில்லை. திரைப்பட உரிமையாளர்களுக்கு 30% கேளிக்கை வரி என்பது கஷ்டமான சுமை தான். இன்று முதல் சினிமா காட்சிகள் ரத்து என்ற முடிவு வருத்தம் அளிக்கிறது.
 
வேறு ஏதாவது முடிவு செய்திருக்கலாம். இதுவே பெரிய நடிகரின் படம் வெளியாகி இருந்தால் இப்படி செய்திருப்பார்களா?. தமிழக அரசிடம் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளோம். கேளிக்கை வரியில் இருந்து தமிழக அரசு விலக்கு அளிக்கும் என நம்புகிறோம் என்றார்.