வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 16 மே 2017 (05:40 IST)

ஸ்டிரைக் வாபஸ்: விஷாலுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால், வரும் 30ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்ய போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு அவரது ஆதரவாளர்களிடையே கூட ஆதரவு கிடைக்கவில்லை



 


பள்ளி, கல்லூரி விடுமுறை நேரத்தில் தியேட்டர்களை மூடுவது முட்டாள்தனம் என்று வெளிப்படையாக இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தர முடியாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துவிட்டனர். மேலும் அஜித்தின் 'விவேகம்', விஜய்யின் 'தளபதி 61', ரஜினியின் '2.0', கமலின் 'விஸ்வரூபம் 2'' ஆகிய பெரிய படங்கள் உள்பட பல படங்களின் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் பெரிய தயாரிப்பாளர்களும் விஷாலின் திட்டத்திற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேறு வழியில்லாமல் ஸ்டிரைக் திட்டத்தை வாபஸ் பெற விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் முதல்வரை சந்தித்த திரையுலக குழுவினர் அவரிடம் தங்கள் கோரிக்கையை தெரிவித்திருப்பதாகவும், விரைவில் அவர் அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் காரணம் கூறி ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவது என்று திட்டமாம்