1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 21 மே 2015 (09:38 IST)

அது வதந்தி யாரும் நம்பாதீங்க - விஷால்

2005 -இல் சௌத்ரியின் மூத்த மகன் ரமேஷ், பூஜா நடிப்பில் வெளியான படம் ஜித்தன். வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகுதான் ரமேஜுக்கு ஜித்தன் என்ற அடைமொழி கிடைத்தது. சரத்குமார் இதில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
 
பத்து வருடங்களுக்குப் பிறகு ஜித்தன் 2 தயாராகிறது. ரமேஷ், சிருஷ்டி டாங்கே நடிக்கும் இந்தப் படத்தில் சரத்குமார் முதல் பாகத்தில் நடித்தது போல், சிறப்புத் தோற்றத்தில் விஷால் நடிக்கிறார் என செய்தி. ஆனால், அதனை விஷால் மறுத்துள்ளார்.
 
"ஜித்தன் 2 படத்தில் நான் நடிப்பது குறித்து யாரும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதில் நான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக வந்த செய்தி ஆதாரமற்ற வதந்தி. ஆகவே, இதை யாரும் நம்ப வேண்டாம் "என்று கேட்டுக் கொண்டுள்ளார். 
 
ஆக, நாமும் கேட்டுக் கொள்கிறோம், ஜித்தன் 2 -இல் விஷால் நடிக்கிறார் என்று சொன்னால், யாரும் நம்பாதீங்க.