படப்பிடிப்பில் விஷால் காயம்… மருத்துவமனையில் அனுமதி


cauveri manickam| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (17:06 IST)
படப்பிடிப்பில் காயம் ஏற்பட்ட விஷால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
 

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தில் பிரசன்னா, வினய், சிம்ரன், அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அருள் கரோலி இசையமைக்கும் இந்தப் படத்தை, ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறார் விஷால்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடலூர் பகுதிகளான சிதம்பரம், பிச்சாவரம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. சிதம்பரத்தில் இன்று சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அப்போது, திடீரென விஷால் பற்றியிருந்த கயிறு அறுந்துகொள்ள, கீழே விழுந்தவருக்கு நல்ல அடி. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அவரைச் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் படக்குழுவினர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :