செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஜூன் 2020 (19:29 IST)

நான்கு மொழிகளில் விஷாலின் ‘சக்ரா’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷால் நடிப்பில் இயக்குனர் எம்எஸ் ஆனந்தன் இயக்கி வரும் ’சக்ரா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து தற்போது லாக்டவுன் நேரத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’சக்ரா’ படத்தின் டிரைலர் துளிகள் கடந்த 22ம் தேதி திங்கட்கிழமை வெளியாகி ரசிகர்களை வரவேற்பை பெற்றதோடு, டிரைலருக்கு நல்ல எதிர்பார்ப்பும் கிடைத்தது.
 
இந்த நிலையில் சற்றுமுன் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. வரும் சனிக்கிழமை ஜூன் 27ஆம் தேதி இந்த படத்தின் நான்கு மொழி டிரைலர் ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் திடீரென விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் மீதியை விஷாலே இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் லாக்டவுன் முடிந்தவுடன் வெளியாகும்