ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (19:56 IST)

விஜய் டிவிக்கு விஷால் போட்ட உத்தரவு

விஷால் போட்ட உத்தரவால் விஜய் டிவி நிர்வாகம் செய்வது அறியாது தவித்து வருகிறது என்கிறார்கள்.
 
நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு ஏகப்பட்டக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார், அதன் செயலாளரான விஷால். ‘படத்தின் புரமோஷனின்போது மட்டுமே டிவிக்களுக்குப் பேட்டி கொடுக்க வேண்டும். விருது வழங்கும் விழாக்களில் நடிகர் சங்கம் சொன்னால் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்’ போன்ற கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன.அதன்படி, யாராவது விருது வழங்கும் விழாவுக்கு நடிகர் -நடிகைகளை அழைப்பதாக இருந்தால், அவர்கள் நடிகர் சங்கத்தைத்தான் முதலில் அணுக வேண்டும். யார் விழாவை நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து, நடிகர் சங்கம் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு, நடிகர் - நடிகைகள் அந்த விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளிக்கும்.
 
அப்படித்தான் விஜய் அவார்ட்ஸ் விழாவைக் கடந்த சனிக்கிழமை நடத்த இருந்தது விஜய்டிவி. ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியான நிலையில் இந்த விழாவில் நடிகர் - நடிகைகள் கலந்துகொண்டால், நடிகர் சங்கத்துக்கு கெட்ட பெயர் வரும் என்று கருதி, பிறகு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னாராம் விஷால்.
 
ஏற்பாடெல்லாம் செய்தாகி விட்டது, ஸ்டேஜ் கூட போட்டாகி விட்டது என்று விஜய் டிவி நிர்வாகம் கெஞ்சியும், விஷால் சம்மதிக்கவில்லையாம். ‘நடிகர் - நடிகைகள் இல்லாமல் விழாவை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் விஷால். இதனால், ஸ்பான்சர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறது விஜய் டிவி என்கிறார்கள்.