விஷாலின் அயோக்யா ரிலீஸ் தேதி அறிவிப்பு

VM| Last Modified புதன், 6 மார்ச் 2019 (21:01 IST)
'சண்டக்கோழி 2’ என்ற சூப்பர் ஹிட் படத்துக்கு பிறகு விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’. தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் ஆகும். 
 
ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கி வருகிறார். ராஷிகண்ணா, பார்த்திபன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார்.
 
இப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அவரை சில காரணங்களால் நீக்கிவிட்டது படக்குழு. தற்போது ஷ்ரத்தா தாஸ் அப்பாடலுக்கு விஷாலுடன் நடனமாடியுள்ளார். அயோக்யா வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :