கொக்கரித்த விஷால்: ஒரே அமுக்காய் அமுக்கிய போலீஸ்
நேற்று ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்பட ஒருசில தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கேட் முன்பு விஷாலுக்கு எதிராக கோஷமிட்டனர். சங்கத்தின் வைப்புநிதி ரூ.7 கோடியை விஷால் எடுத்துவிட்டதாகவும், விஷால் பல கிரிமினல் குற்றங்களை செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கினனர்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்ட அவர்கள் சாவியை பதிவாளரிடம் கொடுக்க முயற்சித்தனர். ஆனால் பதிவாளர் சாவியை பெற மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த தலைவர் விஷால், பூட்டை உடைக்க முயற்சி செய்தார். ஆனால் போலீசார் அதற்கு அனுமதிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க அனுமதிக்க முடியாது என்றும், சட்டவிரோதமாக இங்கு கூடியதாக கைது செய்ய நேரிடும் என்றும் உதவி ஆணையர் கோவிந்தராஜூ எச்சரித்தார். ஆனால் பூட்டை டைத்தே தீருவேன் என்று விஷால் கூறியதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.