வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 15 டிசம்பர் 2014 (12:47 IST)

சண்டக்கோழி இரண்டாம் பாகம் - உறுதி செய்தார் விஷால்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். அதன் இரண்டாம் பாகம் தயாராவதாக லிங்குசாமி கூறியிருந்தார். அதனை விஷால் உறுதி செய்துள்ளார்.
 
சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் நடிக்கயிருக்கிறேன் என்று தகவலை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். சண்டக்கோழியில் அப்பாவாக நடித்த ராஜ்கிரண், வில்லனாக நடித்த லால் இருவரும் இரண்டாம் பாகத்திலும் இருக்கிறார்கள்.
 
நாயகியாக ஸ்ருதியை ஒப்பந்தம் செய்ய அதிக சாத்தியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.