செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 25 ஏப்ரல் 2018 (15:57 IST)

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழ் சினிமா: விஷால்

இந்திய சினிமாவையே தமிழ் சினிமா திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதித்துள்ளோம் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
‘திரு’ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், கெளதம் கார்த்திக் இருவரும் முதன்முறையாக இணைந்து அப்பா – மகனாகவே நடித்திருக்கின்றனர். ஹீரோயினாக ரெஜினா நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ‘விக்ரம் வேதா’புகழ் சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்திருக்கிறார்.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் சினமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் விஷால் பேசியதாவது:-
 
“இந்திய சினிமாவையே தமிழ் சினிமா திரும்பிப் பார்க்கிற மாதிரி சாதித்துள்ளோம் . ஒண்ணு திரையரங்கு உரிமையாளர்கள் சம்பாதிக்கணும். இல்ல படம் தயாரிக்கிற தயாரிப்பாளர்கள் சம்பாதிக்கணும். இதற்கு நடுவில் வெளியாள் வந்து ஆட்டையைப் போட்டு சம்பாதிக்கிறாங்க. இதற்காக போராட்டம் செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி அனைவரும் போராடினோம். தற்போது படங்கள் ரிலீஸாக தொடங்கிவிட்டது” என்று பேசினார்.