1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (13:29 IST)

விருமன் சிங்கிள் ‘கஞ்சா பூவு கண்ணால’ படைத்த சாதனை

விருமன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கார்த்தி நடித்த விருமன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்போது நீண்ட விடுமுறை வருவதால் அந்த தேதியைப் படக்குழு முடிவு செய்துள்ளது.

முன்னதாக  இந்த படத்தின் முதக் சிங்கிள் பாடலான ‘கஞ்சா பூவு கண்னால’ என பாடல் மே 25 ஆம் தேதி ரிலீஸானது. இணையத்தில் வைரல் ஹிட்டான இந்த பாடல் தற்போது 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதை விருமன் படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.