1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:18 IST)

திருச்சிற்றம்பலம் & விருமன் ரெண்டு படத்திலயும் ஒரே கததான்… இத கவனீச்சிங்களா?

சமீபத்தில் ரிலீஸான விருமன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய இருப் படங்களும் ஒரே கதையை இரண்டு விதமாக எடுத்து வெற்றியைப் பெற்றுள்ளன.

கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான விருமன் திரைப்படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. இந்த படத்தின் மையக்கதை ‘அம்மாவின் சாவுக்குக் காரணம் தன்னுடைய தந்தைதான் என நினைத்து அவரை வெறுக்கும் மகன். அவர்கள் இருவருக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளே கதை’. இதை இயக்குனர் முத்தையா தன்னுடைய ஸ்டைலில் ஆக்‌ஷன் மசாலா கலந்து விறுவிறுப்பாக சொல்லியிருந்தார்.

அதே போல நேற்று வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் மையக்கதையும் இதேதான். இங்கே கூடுதலாக தாயோடு சேர்த்து தங்கையின் மரணமும். ஆனால் இந்த திரைப்படம் நகரத்தில் நடப்பதாகவும் பீல்குட் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களிலும் கதாநாயகனுக்கு தந்தையாக நடித்தது பிரகாஷ்ராஜ்தான். ஒரு மாதிரியான கதைக்களத்தோடு அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகியுள்ள இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்று வருகின்றன.