தள்ளிப்போகும் விஐபி 2 ரிலீஸ்: காரணம் என்ன??


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (15:53 IST)
தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 
 
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்தை மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
தற்போது, தெலுங்கு மற்றும் இந்தியில் பட ரிலீஸ் தள்ளிப்போகிறது. தமிழில் வெளியாகிய மறு வாரம் அதாவது, ஆகஸ்ட் 18 ஆம் தேதி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரிலீஸ் ஆகும் என்று தெரியவந்துள்ளது.
 
படத்திற்கான சென்சார் சான்றிதழ் விண்ணப்பிக்கும் போது மூன்று மொழிகளுக்கும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத  காரணத்தினால், இந்தி மற்றும் தெலுங்கில் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
தமிழில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளதை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு நேற்று மாலையே தொடங்கி நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :