திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (12:20 IST)

அப்படி நடித்தது வித்தியாசமான அனுபவம் – அமலா பால்

திருமணமான பெண்ணாக ‘விஐபி 2’ படத்தில் நடித்திருப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது’ எனத் தெரிவித்துள்ளார் அமலா பால்.




செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடித்துள்ள படம் ‘விஐபி 2’. 2014ஆம் ஆண்டு வெளியான ‘வேலையில்லை பட்டதாரி’ வெளியாகி, இன்றோடு 3 வருடங்கள் ஆகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில், தனுஷின் காதலியாக ஷாலினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அமலா பால்.

“இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். காரணம், தனுஷுடன் எனக்குத் திருமணம் நடந்துவிட்டது. திருமணமான பெண்ணாக நடிப்பது, வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்கிறார் அமலா பால். செளந்தர்யா ரஜினிகாந்த் உள்பட ஒட்டுமொத்த டீமுமே ‘விஐபி 2’ படத்தின் ரிலீஸுக்கு ஆவலாகக் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அமலா பால், “முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் அதிக ஸ்டைலிஷ்ஷாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்