திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2023 (14:46 IST)

காதலர் வினய்யுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை… திருமணம் எப்போது?

நடிகர் வினய்யும் விமலா ராமனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வினய், அதற்கடுத்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் ரூட்டை மாற்றிக்கொண்டு வில்லன் வேடங்களிலும் கலக்கி வருகிறார். துப்பறிவாளன், டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை விமலா ராமனுடன் காதலில் இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் இப்போது விமலா ராமன் தற்போது தனது காதலர் வினய் மற்றும் பெற்றோருடன் தனது 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் பரவ ரசிகர்கள் எப்போது திருமணம் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.