மாதவனுக்குப் பதிலாக நடிக்கும் வில்லன் நடிகர்
மாதவனுக்குப் பதிலாக, அந்த கேரக்டரில் வில்லன் நடிகர் சோனு சூத் நடிக்கிறார்.
‘டெம்பர்’ தெலுங்குப் படம், ஹிந்தியில் ‘சிம்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. ரோகித் ஷெட்டி இயக்கும் இந்தப் படத்தில், ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்க, சரா அலிகான் ஹீரோயினாக நடிக்கிறார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க மாதவனிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் தான் தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறார் மாதவன். இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையில், அவரால் தற்போது ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது. எனவே, அவருக்குப் பதிலாக பிரபல வில்லன் நடிகர் சோனு சூத் அந்த கேரக்டரில் நடிக்கிறார். தமிழில் ‘சந்திரமுகி’, ‘ஒஸ்தி’ உள்ளிட்ட பல சில படங்களில் நடித்திருக்கிறார் சோனு சூத்.