1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (22:35 IST)

விக்ரம் வேதா' படத்தின் ரன்னிங் டைம்

விஜய்சேதுபதி, மாதவன் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள 'விக்ரம் வேதா' திரைப்படம் இவ்வார வெள்ளியன்று வெளியாகவுள்ளது.



 
 
இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை  நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
 
இந்த படம் 147 நிமிடங்கள் அதாவது 2 மணி 27 நிமிடங்கள் ஓடுகின்றது. சரியான அளவில் இந்த படத்தின் நீளம் இருப்பதால் இந்த படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கணவன் - மனைவி இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி தம்பதிகள் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, மாதவன், கதிர், 'வரலட்சுமி சரத்குமார், ஷராதா ஸ்ரீநாத், ஜான் விஜய், பிரேம் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். வினோத் ஒளிப்பதிவில் ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டிரெடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.