தெலுங்கில் ரீமேக் ஆகிறது ‘விக்ரம் வேதா’


cauveri manickam| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (13:03 IST)
கடந்த வாரம் வெளியான ‘விக்ரம் வேதா’, தெலுங்கில் ரீமேக் ஆகிறது.

 


 
மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. கேங்ஸ்டர் படமான இதை, புஷ்கர் – காயத்ரி இயக்கியிருந்தனர். வரலட்சுமி, கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

ஜி.எஸ்.டி.யால் தியேட்டருக்கு கூட்டம் குறைந்திருந்த நிலையில், இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகியிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு. முதல் வார முடிவில், 40 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது இந்தப் படம்.

இதை, தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ராணா டகுபதி மற்றும் வெங்கடேஷ் இணைந்து நடிக்கலாம் என்கிறார்கள். ஆனால், இந்த புராஜெக்ட் டேக் அப் ஆக இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்கிறார்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :