Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சத்ரியனாக மாறியது முடிசூடா மன்னன்


bala| Last Modified திங்கள், 26 டிசம்பர் 2016 (13:39 IST)
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த படம் முடிசூடா மன்னன். யுவன் இசையமைத்து வந்த இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

தற்போது இப்படத்தின் தலைப்பு சத்ரியன் என மாற்றப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு மணிரத்னம் கதை, திரைக்கதை அமைப்பில், மறைந்த கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான படம் சத்ரியன். விஜயகாந்த் நாயகனாக நடித்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

மணிரத்னத்தின் ஆலயம் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து முறைப்படி அனுமதி வாங்கி சத்ரியன் என பெயர் வைத்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :