1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (10:15 IST)

பகத் பாசில் பிறந்தநாள்; விக்ரம் படக்குழு வெளியிட்ட அப்டேட்!

இன்று மலையாள நடிகர் பகத் பாசில் பிறந்தநாளையொட்டி விக்ரம் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் விக்ரம். இந்த படத்தில் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் இன்று பகத்பாசில் பிறந்தநாளையொட்டி புதிய போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்