விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீடு எங்கே? வெளியான புதுத் தகவல்!
விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு மே 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. மலையாள உரிமையை சிபு தமீம்ஸ் கைப்பற்றியுள்ளார்.
படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.