புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (20:36 IST)

டுவிட்டரில் இணைந்தார் நடிகர் விக்ரம்: ஒருசில மணி நேரத்தில் 24 K ஃபாலோயர்கள்!

vikram
பிரபல நடிகர் விக்ரம் இன்று டுவிட்டரில் இணைந்ததை அடுத்து ஒரு சில மணி நேரங்களில் அவருடைய டுவிட்டர் பக்கத்திற்கு 24 ஆயிரம் ஃபாலோயர்கள்கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால்.
 
 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருமே டுவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் இன்று பிரபல நடிகர் விக்ரம் டுவிட்டரில் இணைந்துள்ளார்
 
இன்னும் அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் கூட பதிவு செய்யப்படாத நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கத்திற்கு 24 ஆயிரம் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
விக்ரம் நடித்த ’கோப்ரா’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அது குறித்த செய்திகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது