வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2014 (10:49 IST)

ரஜினிக்கு அடுத்து விக்ரம் படத்தை தயாரிக்கும் ஈரோஸ் இன்டர்நேஷனல்

ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை தயாரித்த இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் இன்டர்நேஷனல் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. அதற்காக அவருடன் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
ஐ படத்தை முடித்த விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு முடியும் என கூறப்படுகிறது. அதையடுத்து 2015 ஜனவரியில் ஈரோஸ் தயாரிக்கும் படம் ஆரம்பமாகிறது.
 
படத்தின் இயக்குனர் மற்றும் பிற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.