மீண்டும் திரைக்கு வரும் விஜய்யின் படம் ! ரசிகர்கள் ஹேப்பி !

vijay
sinoj kiyan| Last Updated: திங்கள், 13 ஜனவரி 2020 (21:50 IST)
கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்.பி ராஜ்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் சுறா. இப்படம் வெளியானபோது பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் இப்படத்தை தற்போது மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
விஜய்யின் நடிப்பின் வெளியான சுறா படம் வெளியாகி 10 வருடங்கள் ஆன நிலையில், கேரளா மாநிலம் கொள்ளம் விஜய் ரசிகர் மன்றத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க இப்படம் ஜனவரி 26 ஆம் தேதி, ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர்.
 
இதனால் விஜய் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :