வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (16:39 IST)

என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அந்த நடிகை தான் காரணம்: விஜயலட்சுமி திடுக்கிடும் குற்றச்சாட்டு

என்னை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அந்த நடிகை தான் காரணம்
நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றார் என்பதும் அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்நிலையில் தற்போது மருத்துவமனை நிர்வாகம் அவரை திடீரென வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி தனக்கு இன்னும் முழுமையாக உடல்நிலை குணமாகவில்லை என்றும் மூச்சுவிடவே தனக்கு சிரமமாக இருப்பதாகவும் ஆனால் மருத்துவமனை நிர்வாகம் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்
 
நடிகை காயத்ரி ரகுராம் தான் என்னை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளதாகவும் அன்று எனக்கு எனக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ரகுராம் இன்று திடீரென மாறியது ஏன் என்று புரியவில்லை என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் எனக்கு பின்னால் எந்தவித அரசியல் கட்சியும் இல்லை என்றும் நான் நாடகம் போடுவதாக கூறுவது தவறு என்றும் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். காயத்ரி ரகுராமை குற்றஞ்சாட்டிய விஜயலட்சுமியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது