Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாடலாசிரியரானார் நடிகை விஜயலட்சுமி


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (21:27 IST)
இயக்குனர் அகத்தியனின் மகளும் சென்னை 28, அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவருமான விஜயலட்சுமி இப்போது பாடலாசிரியராகவும் பரிமாணமடைந்துள்ளார். 

 

 
ஃபெரோஸ் என்ற உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜயலட்சுமி, கணவருக்காக பண்டிகை என்ற படத்தை தயாரித்து வருகிறார். இயக்கம் ஃபெரோஸ். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை தனது கணவருடன் இணைந்து விஜயலட்சுமி எழுதியுள்ளார். அத்துடன் ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.
 
விஜயலட்சுமிக்கு தமிழில் நிறைய பாண்டித்யம் உண்டு, அவரால் சரளமாக பாடல் எழுத முடிகிறது என்று ஃபெரோஸ் மனைவியை பாராட்டியுள்ளார். பண்டிகையில் கிருஷ்ணா, ஆனந்தி நடித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :