30 ஆண்டுகளுக்குப் பின் ரீமேக் ஆகும் விஜயகாந்த் படம்… கதாநாயகனாக அவர் மகன்!

Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (17:25 IST)

விஜயகாந்த் நடித்து
90களில் வெளியான மாநகரக் காவல் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை அவரது குடும்பமே வாங்கியுள்ளதாம்.


விஜயகாந்த் மற்றும் லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் 90 களில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் மாநகரக் காவல். பிரதமரைக் கொல்ல நடக்கும்
சதித்திட்டத்தை பாதுகாப்பு அதிகாரியான விஜயகாந்த் எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே அந்த படத்தின் கதை. இந்த படத்தின் டப்பிங் தெலுங்கிலும் ரிலிஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளது விஜய்காந்தின் குடும்பம். அதில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனைக் கதாநாயகனாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரையுலகில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்துள்ள சண்முகப்பாண்டியன் ஒரு ஹிட் கதைக்காக காத்திருக்கிறார். அவருக்கு இந்த கதை பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரது குடும்பத்தினர் கதையைப் பெற்றுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :