1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (18:31 IST)

இளையராஜா - மோடி விவகாரம் குறித்து விஜயகாந்த் டுவிட்!

vijayakanth
பிரதமர் மோடி மற்றும் சட்டமேதை அம்பேத்கார் குறித்து இளையராஜா கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டரில் தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 
இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இளையராஜாவின் கருத்து தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற நோக்கத்தோடு ஏற்றுக்கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது.
 
மேலும் அண்ணல் அம்பேத்கர், பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்றைக்கும் அவரவர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர். ஒரு சூரியன், ஒரு சந்திரன் அதே போல தான் இங்கு யாரையும் யாரோடும் ஒப்பிட முடியாது, அவர்களுக்கு நிகர் அவர் தான்’ 
 
இவ்வாறு விஜயகாந்த் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.