செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:17 IST)

3,374கர்ப்பிணிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3000க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘தமிழகத்தில் இதுவரை 3374 கர்ப்பிணி பெண்கள் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளனர்’ என அறிவித்துள்ளார்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவது எளிதானதல்ல என சொல்லபடுகிறது.