ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By C.M.
Last Updated : சனி, 23 டிசம்பர் 2017 (15:19 IST)

‘விஜய் 62’ படத்தில் இணைந்த பிரபலம்...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் ‘விஜய் 62’ படத்தில், இன்னொரு பிரபலமும் இணைந்துள்ளார்.


 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘விஜய் 62’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில், நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் யார் என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 
அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், டெக்னீஷியன்கள் யார் யார் என்ற விவரம் நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி, ஒளிப்பதிவாளராக க்ரீஷ் கங்காதரனும், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்ற இருக்கின்றனர். கலை இயக்குநராக சந்தானம் பணியாற்றுகிறார்.
 
இவர் ஏற்கெனவே ‘தெய்வத் திருமகள்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்பட பல படங்களில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்ல, ‘ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ‘காவியத் தலைவன்’ படங்களில் பணியாற்றியதற்காக தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.