1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (21:10 IST)

காஷ்மீரில் ''லியோ'' படக்குழுவினர் ..லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர்,   நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் லியோ.

விஜய்யின் 67 வது படமான லியோவில், அர்ஜூன், மிஸ்கின், நடிகை திரிஷா, மன்சூர் அலிகான், சஞ்சத் சத் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.

மாஸ்டர் படத்திற்குப் பின் விஜய் – லோகேஷ் கனகராஜ் – அனிருத் இணைந்துள்ள இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்று அனிருத் இப்படத்திற்கு இசையமைத்த ஆங்கிலப் பாடல் வீடியோவை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில்,லியோ பட ஷூட்டிங் காஷ்மீர் மா நிலத்தில் நடந்து வரும் நிலையில், படக்குழுவினருடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

இது வைரலாகி வருகிறது.