திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2019 (14:25 IST)

இதுக்கெல்லாம் விஜய் எதுவும் சொல்லமாட்டார்! "கேப்மாரி" எஸ்.ஏ.சி பதில்!

நடிகர் விஜய் அரசியல் வாதிகளை பற்றி தைரியமாக மேடையேறி பேசி பலரையும் கதிகலங்க செய்திடுவார். ஆனால், அவரது அப்பாவோ அவர் பேசின வார்த்தைகளை சல்லி பைசாவுக்கு உபயோகமில்லாதவகையில் முரண்பாடான பதிலை சொல்லி கிண்டலுக்கும் கேலிக்கும் வழி வித்திடுவார்.
அந்தவகையில் சமீபத்தில் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை குறித்து எஸ்.ஏ சந்திர சேகரை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் பேட்டி எடுத்தது. அப்போது மகன் பேசிய வார்த்தைகளுக்கும், அரசியவாதிகளுக்கும் அடிபணியும் வகையில் பதில் கூறியிருந்தார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் சல சலப்பை ஏற்படுத்தியிருந்தது. 
 
இந்நிலையில் தற்போது இயக்குனர் எஸ்.ஏ சந்திர சேகர் "கேப்மாரி" அடல்ட் காமெடிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின்  டீசர் அண்மையில் வெளியாகி ட்ரெண்டானது. அதிலும் மகன் விஜய் கெத்தாக சமுதாயத்தின் பார்வை நம் மீது படவேண்டும் என்று அயராது முயற்சித்து வரும் நேரத்தில் அவரது தனது இப்படிப்பட்ட படங்களை இயக்குவது பொதுமக்களிடையேவும் விஜய் ரசிகர்களிடையேவும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. 
 
இது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இந்த படத்தை பற்றி விஜய் உங்களிடம் ஏதாவது கேட்டாரா? என கேட்டதற்கு,  இது போன்ற விஷயத்தில் விஜய் எப்போதும் தலையிட மாட்டார். வேலை வேறு, பர்சனல் வேறு என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதுமட்டுமின்றி கேப்மாரி படம் ரிலீஸ் ஆகும் முன் விஜய்க்கு படத்தை போட்டு காட்டுவேன் என்றும் கூறியுள்ளார் எஸ்.ஏ.சி.