'விஜய் மக்கள் இயக்க' நிர்வாகிகளை சந்திக்கவுள்ள விஜய்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் இணைந்து திரிஷா, மிஸ்கின், அர்கூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிற்கு இடையே தமிழகம் முழுக்க 10 ஆம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை அவர்களின் பெற்றோருடன் சென்னைக்கு வரவழைத்து கல்வி விழா நடத்தினார். அந்த விழாவின்போது, சான்றிதழ், உதவித் தொகை மற்றும் விருந்து வைத்தார் விஜய். அந்த விழாவில் அவர் பேசிய பேச்சு பெரும் பேசு பொருளானது.
நடிகர் விஜய் கல்வி விழாவில் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், விஜய் சினிமாவில் இருந்து 3 ஆண்டுகள் ஓய்வு எடுத்து அரசியல் கவனம் செலுத்தப்போவதாக தகவல் வெளியான நிலையில், விஜய் தரப்பு இதை மறுத்தனர்.
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் நாளை சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளளது.
மேலும், மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின் அவர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.