1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 ஜூலை 2024 (16:56 IST)

அந்தகன் படத்துக்கு ப்ரமோஷன் செய்யப் போகும் விஜய்… !

பிரசாந்த் நடிப்பில் அவரின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ள அந்தகன் திரைப்படம் பாலிவுட்டில் ரிலீஸான அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக். இந்த படம் உருவாகி சில ஆண்டுகள் ஆனபின்னும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த் இந்த படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்த்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் ரிலிஸூக்கு காத்திருக்கிறது. படத்தில் பிரசாந்துடன், பிரியா ஆனந்த், சிம்ரன் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை நடிகர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட உள்ளாராம். கோட் படத்தில் இணைந்து நடித்த போது பிரசாந்துடன் ஏற்பட்ட நெருக்கமான நட்பின் காரணமாக இந்த பாடலை வெளியிட விஜய் சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.