1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (12:49 IST)

விஜய் மனசு யாருக்கு வரும்! படப்பிடிப்பு சென்னையில் நடத்த இதுதான் காரணமாம்!

தளபதி விஜய் நடிக்கும் 63 வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தான் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அட்லி இயக்கி வருகிறார்.
 
ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. படத்தின் முக்கிய வில்லனாக ஜாக்கி ஷராப் நடிக்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பரங்கிமலை, காசிமேடு,தியாகராய நகர், ஆகிய இடங்களில் நடந்துள்ளது. ஏன் சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது என்பது குறித்த கேள்விக்கு படக்குழுவினர் விஜய்யை கையை காட்டுகின்றனர். நம் ஊர் ஆட்களுக்கு வேலை கிடைக்கட்டும் என்று சொல்லி விஜய் சொன்னதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
 
இது தொடர்பான செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சென்னையின் ஈசிஆர் சாலைகளில் மிக பிரம்மாண்டமாக  கால்பந்து மைதான அரங்கம் அமைக்கப்படுகிறது. விஜய் தற்போது வெளிநாடு சென்று இருக்கிறார்.அவரது மகன் கனடாவில் படித்து வருகிறார். அவரை பார்க்க விஜய் குடும்பத்துடன் கனடா சென்று இருக்கிறாராம். அவர் கனடாவில் இருந்து திரும்பிய உடன் சென்னை ஈசிஆரி அமைப்பட்டுள்ள கால்பந்து அரங்கில் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகுமாம்.