ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2024 (12:21 IST)

பிக்பாஸ் சீசன் 8.. கடந்த சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் காதலர் போட்டியாளரா?

Archana
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் அதில் கடந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் காதலர் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகி உள்ள நிலையில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் பாரதி கண்ணம்மா நடிகர் அருண் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக இருப்பதாக தெரிய வருகிறது.
 
இவர் கடந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் காதலர் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி ’மேயாத மான்’ உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனா இவரை போட்டியாளராக நியமனம் செய்ய பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் நடிகர் அஸ்வின், விஜய் டிவி ஜாக்குலின் உள்ளிட்டவர்களும் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் சினிமா நட்சத்திரங்கள், டிவி நட்சத்திரங்கள், சமூக வலைதள பயனாளர்கள், இசையமைப்பாளர் ஒருவர் ஆகியோரும் போட்டியாளராக கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva