Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேலைக்காரன் படத்தை கைப்பற்றிய விஜய் டீவி


bala| Last Modified செவ்வாய், 20 ஜூன் 2017 (12:10 IST)
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சிவகார்த்திகேயன். பின்னர் மெரினா படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்,ரெமோ போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உள்ளார்.

 


தற்போது இவர் ஜெயம் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படத்திற்கு எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டீவி வாங்கியுள்ளது. இது குறித்து விஜய் டீவி தலைமை அதிகாரி கிருஷ்ணன் குட்டி கூறுகையில்,சிவகார்த்திகேயனின் வளர்ச்சியும்,தொடர் வெற்றியும் நாம் அறிந்த ஒன்றுதான். ஜெயம் ராஜா தனி ஒருவனில் செய்த மேஜிக் அறிந்தே வைத்திருக்கிறோம். இந்த வெற்றிக் கூட்டணி நிச்சயம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும். வேலைக்காரன் சாட்டிலைட் உரிமையை நாங்கள் வாங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :