செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 23 ஜூலை 2018 (22:10 IST)

சர்கார் படத்தின் டப்பிங்கை துவங்கிய விஜய்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிரது. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். 
 
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது சென்னை அருகே கிழக்கு கடற்கைரை சாலை செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 
 
அடுத்து இந்த மாத இறுதியில் படக்குழு லாஸ் வேகாஸ் செல்கிறது. அங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருக்கின்றனர். இதனால், இதற்கு இடையில், நடிகர் விஜய்  தன்னுடைய டப்பிங் பணிகளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 
அதாவது, லாஸ் வேகாஸ் கிளம்புவதற்குள் தன்னுடைய போர்‌ஷனுக்கு டப்பிங் பேசி முடித்துவிட விஜய் திட்டமிட்டுள்ளாராம்.