1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (08:15 IST)

விஜய்யின் கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸ்ஸில் தொடரும் சிக்கல்!

அரசியல் வருகையை அறிவித்துள்ள விஜய் தற்போது  GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது.  இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியது. அதே போல தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த முடிவில் இருந்து சன் தொலைக்காட்சி நிறுவனம் விலக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கானக் காரணம் என்ன என்று தெரியவில்லை.

இதையடுத்து மற்ற முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களோடு தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். ஆனால் நிறுவனங்கள் சொல்லும் விலை தயாரிப்பு நிறுவனம் சொல்லும் விலைக்கு அருகில் கூட வரவில்லையாம். அதனால் இப்போது வரை கோட் படத்தின் சேட்டிலைட் உரிமை விற்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.