செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (14:08 IST)

இயக்குனராக அறிமுகமாகும் விஜய்யின் மகன் சஞ்சய்!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்மந்தமான படிப்பை முடித்துள்ளார். அதனால் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சஞ்சய் கனடாவில் “புல் தி டிரிகர்” என்ற குறும்படத்தை இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.