1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 பிப்ரவரி 2021 (16:14 IST)

வெற்றிமாறன் படத்தில் விஜய் சேதுபதிக்கு சம்பளம் இவ்வளவா?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் நடக்க உள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாரதிராஜா முன்பு ஒப்பந்தம் ஆனார். ஆனால் படப்பிடிப்பு நடக்க உள்ள டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சமவெளிப்பகுதியிலேயே குளிர் அதிகமாக இருக்கும். இந்நிலையில் காடுகளில் முழுப் படப்பிடிப்பும் நடக்க உள்ளதால் பாரதிராஜாவால் வயோதிகத்தின் காரணமாக குளிரை தாங்க முடியாத சூழல் உருவாகவே அப்படத்தில் அவர் விலகினாராம்.

இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆனார். விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆனதால் சூரிக்கான முக்கியத்துவம் குறையுமோ எனப் பேசப்பட்டது. ஆனால் இன்று இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி அந்த படம் பற்றி பேசும்போது ‘சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நான் நடிக்கிறேன் என்பது பெருமையான விஷயம்’ எனக் கூறி அந்த படத்தின் கதாநாயகன் சூரிதான் என்பதை பெருந்தன்மையாகக் கூறியிருந்தார்.

ஆனால் சம்பள விஷயத்தில் அவர் இவ்வளவு பெருந்தன்மையாக இருக்கவில்லையாம். வழக்கமாக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவர் இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் மற்றும் குறைந்த தேதிகளே ஒதுக்கி இருந்தாலும் 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.