1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (12:57 IST)

கமல் ஏற்படுத்திய கஷ்டம், விஜய் சேதுபதிக்கு 50 லட்சம் நஷ்டம்

கமலின் உத்தம வில்லன் படத்தை வெளியிட, தனது தயாரிப்பில் இருக்கும் ரஜினி முருகன், சதுரங்கவேட்டை வினோத்தின் இயக்கத்தில் சூர்வை வைத்து தயாரிக்கும் படம் என சம்பாதித்த பணம், சம்பாதிக்கப் போகும் பணம் என அனைத்தையும் அடகு வைத்தார் லிங்குசாமி. உத்தம வில்லன் மூன்று நாளில் தனது வசூலை நிறுத்திக் கொண்டதால், மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது திருப்பதி பிரதர்ஸ். ஏறக்குறைய திவால் நிலை. 
திருப்பதி பிரதர்ஸின் இடம் பொருள் ஏவல் படம் எப்போதோ வந்திருக்க வேண்டும். விஜய் சேதுபதி, சம்பள பாக்கியை தந்தால் மட்டுமே டப்பிங் பேசுவேன் என்றதால் படம் முடியாமல் நிற்கிறது.
 
விஜய் சேதுபதிக்கு 6 கோடிகள்வரை மார்க்கெட் இருக்கும் நிலையில், வெறும் ஒன்றரை கோடிக்கு இடம் பொருள் ஏவல் படத்தை ஒப்புக் கொண்டு நடித்துத் தந்தார். தன்னை அறிமுகப்படுத்திய சீனு ராமசாமிக்காக இந்த தாராளம். இந்த ஒன்றரையிலும் அரை கோடி நிலுவையில் உள்ளது. அதற்குதான் டப்பிங் பேச மாட்டேன் போர்க்கொடி.
 
உத்தம வில்லனால் திருப்பதி பிரதர்ஸ் நஷ்டமடைந்ததை கேட்டறிந்த விஜய் சேதுபதி, மீதமுள்ள அரை கோடியையும் வேண்டாம் என்று தள்ளுபடி செய்துள்ளார்.
 
ம்...உபத்திரவ வில்லன்