வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (09:46 IST)

விஜய் சேதுபதி அடுத்த படம் இவருடனா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  வாலு படத்தை இயக்கிய விஜய் மில்டனின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி, இவரது சமீபத்திய படங்கள்அ னைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இதனால் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இவர் விக்ரம் வேதா, ஜுங்கா படங்களுக்கு பிறகு செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார். இதேபோல் கடைசி விவசாயி படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி, இயக்குனர் விஜய் மில்டனின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பைரவா படத்தை தயாரித்த விஜயா ப்ரொடக்சன்    தயாரிக்க உள்ளது.  வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்த படத்தின் ஷுட்டிங் 2019ம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.