திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (09:16 IST)

மருத்துவமனையில் இருக்கும் போண்டா மணிக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் சேதுபதி

நடிகர் போண்டாமணி சிறுநீரக பாதிப்பால மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான போண்டா மணி சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கபட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என சக நடிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் போண்டா மணியை நேரில் சந்தித்து அவருடைய சிகிச்சை செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்று தெரிவித்தார்.  மேலும் நடிகர் சங்கம் சார்பாக நடிகர் மனோபாலாவும் சென்று அவருக்கு நிதியுதவி அளித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்போது போண்டா மணியின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி போண்டா மணியின் மருத்துவ செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.