1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2022 (09:01 IST)

விஜய் சேதுபதியின் DSP பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள DSP பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடித்து ள்ள 46வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்கும் என சொலல்ப்படுகிறது. இந்த படத்தில் சேதுபதி மற்றும் செக்க சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தது. ஆனால் படத்தின் முதல் லுக் போஸ்டரில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 2 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.