எனக்கு புதுசு புதுசா ஹீரோயின் வேண்டும்; அடம்பிடிக்கும் விஜய் சேதுபதி


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 19 மே 2017 (17:30 IST)
ஒரே ஹீரோயினுடன் திரும்ப திரும்ப நடிக்க முடியாது, என்னுடைய படத்திற்கு புதுசு புதுசா ஹீரோயின் வேண்டும் என விஜய் சேதுபதி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

 
விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவருக்கென்று தனி இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது ஒரு படத்தில் நடித்த நடிகையுடன் அடுத்த படத்தில் நடிக்க தயக்கம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக அவர் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கூறியதாவது:-
 
எனக்கு பழைய ஹீரோயின் பிடிக்காது, புதுசு புதுசா ஹீரோயின் வேண்டும்,. அதோடு ஒரே ஹீரோயினுடன் நடித்தால் தேவையில்லாமல் வதந்தி பரவுகிறது, என்று தெரிவித்துள்ளார். மேலும் வதந்தி காரணமாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
 
விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷுடன் மூன்று படங்கள், காயத்ரியுடன் இரண்டு படங்களும் நடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :