செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 23 ஏப்ரல் 2018 (09:06 IST)

விஜய்சேதுபதி-அஞ்சலி இணையும் இரண்டாவது படம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து பிசியாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இந்த படத்தை 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கவுள்ளார். ஏற்கனவே 'இறைவி' என்ற படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

மேலும் இந்த படத்தில் லிங்கா மற்றும் விவேக் பிரச்சன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். 
 
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும்  இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.