திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 5 மே 2021 (16:37 IST)

காத்து வாக்குல ரெண்டு காதல்… விக்னேஷ் சிவனோடு ஊர் சுற்றும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் காட்சிகளை இப்போது படமாக்கி வருகிறாராம் விக்னேஷ் சிவன்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் சில காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டன. அதையடுத்து படத்தில் நடிக்கும் 3 பேருமே பிஸியானதால் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் இந்தி படத்தில் நடிக்க போன விஜய் சேதுபதி அங்கு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் அந்த நாட்களை வீணாக்காமல் இப்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

ஆனால் கதாநாயகிகள் இருவரும் பிஸியாக இருப்பதால் விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளாராம் விக்கி.